9/23/2011

திறந்து கொண்ட என் பேனா...!

விடியலின் வெண் பனிச்சாரல்...!
வானில் கதிரவனின் கரத் தூவல்...
அந்தி காலை துயிலெழுப்பும் சேவல்...!
அல்லாஹ்வின் நினைவு தரும் ஏவல்..!





எழுதுகிறேன் இன்று முதல்....
இறை தூதர் கண்ட
சமூகத்தின் சரித்திரத்தை...
இனி கடையில் வாங்கப் போவது..
“ROTOMAC”
பேனா அல்ல...
சிந்தனையை செதுக்கப் போகும்..
சாதனைப் பேனா...!!!!
நதிகளையும் காடுகளையும் பாட...
பல கவிஞர்கள் தோன்றலாம்...!
கற்பனையில் பல காவியங்கள் படிக்கலாம்...
ஆனால் !
கல்பு சுமந்த ஈமானை 
கல்வெட்டாய் செதுக்கிட..
உமர் பவத் தீன் மீண்டு வருவாரா?
என் புத்தகத்தின் தாள்கள் நனையட்டும்..
இறை சன்னிதியில் 
முழந்தாளிட்டு நிற்கிறேன்...
இதுவரை என் பேனாக்களின்..
உரிமைகளை சிறை வைத்ததற்கு...
அதன் மூடி இன்று திறந்து கொண்டது...
என் உள்ளம் திறந்தது போன்று...!
நோன்பு வந்ததும்..
தடவைகள் கணக்கிட்டு; 
ஓதி முடித்தேன் அல்குர்ஆனை..
இன்று கேட்ட இந்த வசனங்கள்
கன்னத்தில் வந்து அறைந்து சென்றது - என்னை
இத்தனை நாள் நீ கவனிக்கவில்லையே என.......
அறியாமை இருளை...
அள்ளிச் சொரிகிறது...
அநாச்சாரம் மிக்க இந்த அறிவியல் உலகம்....
காலை கண் முழிப்பிலிருந்து...
கட்டிலுக்கு மீழும் வரை...
கண் முன்னே வழி காட்டுகிறான்.. கறை உள்ளம் கொண்ட ஷைத்தான்...!!

(Akeela Fathin – UAE University)    

No comments:

Post a Comment